உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வட்ட அளவிலான தடகளம் மாணவ, மாணவியர் பங்கேற்பு

வட்ட அளவிலான தடகளம் மாணவ, மாணவியர் பங்கேற்பு

மோகனுார்: மோகனுார் அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி இரண்டு நாட்கள் நடந்தது.முதல் நாள் நடந்த மாணவர்களுக்கான போட்டியை, எம்.பி., மாதேஸ்வரன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்து துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், வட்டக்கொடியை ஏற்றி வைத்து, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட அளவில், 350 மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல், நேற்று நடந்த மாணவிய-ருக்கான விளையாட்டு போட்டியை, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் துவக்கி வைத்தார். போட்டியில், 250 மாணவியர் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவியருக்கு, 100 மீ., 200, 400, 800, 1,500, 3,000 மீட்டர், நீளம், உயரம் மற்றும் குதித்து எட்டி தாண்டுதல், குண்டு, ஈட்டி எறிதல், 400 மீ., தொடர் ஓட்டம், 110 மீ., தடை ஓட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் பிரிவில், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளியும், மாணவியர் பிரிவில், மோகனுார் அரசு பெண்கள் மாதிரி பள்ளியும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தது.ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் புனிதா, பட்டதாரி ஆசி-ரியர் பால கிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியசாமி, செல்வராஜ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி