மேலும் செய்திகள்
சாராய வழக்கு வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்
23-Jan-2025
மதுவிலக்கு வாகனங்கள் ஏலம்நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச்சென்ற வாகனங்களை, மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வாகனங்களை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பொது ஏலத்தில் விடப்படும்.அதன்படி, நேற்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில், 41 இருசக்கர வாகனங்கள், 5 நான்கு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விப்பட்டன. எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தொடங்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி., தனராசு, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், ஏலத்துக்கு முன்தொகை செலுத்தியவர்கள் பார்வையிட்டு ஏலம் எடுத்தனர். மொத்தம், 20 லட்சம் ரூபாய்க்கு வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. அந்த தொகையை ஏலம் எடுத்தோர் தாமதமின்றி செலுத்த வேண்டும் என, மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தனராசு தெரிவித்தார்.
23-Jan-2025