சாலையோரம் ஆக்கிரமிப்புமாநகராட்சி நிர்வாகம் அகற்றம்
சாலையோரம் ஆக்கிரமிப்புமாநகராட்சி நிர்வாகம் அகற்றம்நாமக்கல்:நாமக்கல் மாநகர பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் துாய்மை பணியாளர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட், பிரதான சாலை, கடைவீதி, ரங்கர் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று நடந்தது.மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது, போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.