கந்தசாமி கோவிலில் சத்தாபரண மகாமேரு
கந்தசாமி கோவிலில் சத்தாபரண மகாமேருமல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கடந்த, 11ல் தைப்பூச தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 2:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், சத்தாபரண மகாமேரு நடந்தது. இதில், வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வாண வேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், 'கந்தனுக்கு அரோகரா' என, பக்தி கோசம் எழுப்பி தேரை இழுத்து வந்தனர். அப்போது, பக்தர்கள் தங்களது நிலங்களில் விளைவித்த தானியங்களை தேர் மீது வீசி தரிசனம் செய்தனர். விழாவின், 8ம் நாளான நேற்று, வசந்த விழாவுடன் தைப்பூச விழா நிறைவடைந்தது.