உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி பாலத்தை அதிகாரிகள் ஆய்வு

காவிரி பாலத்தை அதிகாரிகள் ஆய்வு

காவிரி பாலத்தை அதிகாரிகள் ஆய்வுகுமாரபாளையம்:குமாரபாளையம் - பவானி இடையே, பழைய காவிரி பாலம், 1849ல் கட்டப்பட்டது. 175 ஆண்டுகளான நிலையில், இந்த பாலத்தில், 1998 முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அனைத்து வாகனங்களுக்கும் தடைவிதிக்கப்படுகிறது. இந்நிலையில், இதன் உறுதி தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், கோட்ட பொறியாளர் குணா, உதவி கோட்ட பொறியாளர்கள் நடராஜன், மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, 'பாலத்தில் உள்ள, 28 துாண்களும் உறுதியாக உள்ளன. அதனால் தற்போதுள்ள போக்குவரத்து முறையே தொடரட்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை