வெண்ணந்துார் நகரகாங்., கமிட்டி கூட்டம்
வெண்ணந்துார் நகரகாங்., கமிட்டி கூட்டம்வெண்ணந்தூர், :வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். செயலாளர் செல்லியம்மன் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், ஜவுளித்துறைக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை. தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்கு, இரண்டு மாதமாக ஊதியம் வழங்காமல் உள்ளதால், ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஊதியம் வழங்க கேட்டுக் கொள்கிறோம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.