உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச பட்டா கேட்டுநரிக்குறவர் மக்கள் மனு

இலவச பட்டா கேட்டுநரிக்குறவர் மக்கள் மனு

இலவச பட்டா கேட்டுநரிக்குறவர் மக்கள் மனு சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் யூனியன், முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து, பெருமாப்பளையம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், நேற்று சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டனர். அவர்கள் அளித்த மனுவில், 'முத்துக்காப்பட்டி பஞ்., புதுக்கோம்பை மற்றும் கொண்டமநாய்க்கன்பட்டி பஞ்.,ல், 40 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம் காலியாக உள்ளது. இந்த இடத்தில் வீடு இல்லாத, 300 குடும்பங்களை சேர்ந்த ஏழை மக்களுக்கு பிரித்து, குடியிருக்க பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ