உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா

கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா

கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழாபெருந்துறை, பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். கொங்கு வேளாளர் அறக்கட்டளை துணைத் தலை வர் கிருஷ்ணன், மூத்த உறுப்பினர் பழனிச்சாமி, ஈரோடு கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி தாளாளர் தேவராஜா முன்னிலை வகித்தனர். பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் கொங்கு தொழிற்பயிற்சி நிலைய தாளாளர் வெங்கடாசலம் வரவேற்றார். பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் வேதகிரி ஈஸ்வரன் மற்றும் கொங்கு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தினேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தனர். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி பங்கேற்று பரிசு வழங்கி பேசினார். விளையாட்டு விழாவுக்கு தமிழ்நாடு வா-லிபால் சங்க துணைத் தலைவரும், காவல் துறையை சேர்ந்தவருமான சதாசிவம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில அளவிலான போட்டிகளில் வென்ற கல்லுாரி மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை