உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புகரூர்:கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், அனைத்து பகுதிகளிலும் நீர் மோர் பந்தல் திறக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்டானாவில், மாவட்ட தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை, அக்கட்சி மாவட்ட செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ராஜா, மாநகர பகுதி செயலாளர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை