உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடுப்பில்லா ஆரோக்கிய சமையல்பொதுமக்கள் ஆவலுடன் பங்கேற்பு

அடுப்பில்லா ஆரோக்கிய சமையல்பொதுமக்கள் ஆவலுடன் பங்கேற்பு

அடுப்பில்லா ஆரோக்கிய சமையல்பொதுமக்கள் ஆவலுடன் பங்கேற்புராசிபுரம்:ராசிபுரம் வீ த லீடர்ஸ் அறக்கட்டளை, சேலம் நாம் அறக்கட்டளையினர் இணைந்து அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் முறை என்ற பயிற்சி வகுப்பை ராசிபுரத்தில் நடத்தினர். 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு காலை சிகப்பு அவல், புடலங்காய், ஊற வைத்த வேர்க்கடலை, நாட்டு சர்க்கரை கலந்து செய்யப்பட்ட லட்டு மற்றும் தேங்காய்ப்பாலில் செய்யப்பட்ட நீர்மோர் வழங்கி வரவேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சுகந்தி அனைவரையும் வரவேற்றார். சென்னையிலிருந்து வந்திருந்த பயிற்சியாளர் ராஜேந்திர தானானந்தா, பஞ்ச பூத முறையில் அன்றாட உணவும் வாழ்க்கை முறையும் மற்றும் உணவும் உணர்வும் உண்ணும் முறைகளையும் எடுத்துக்கூறி, உணவு வகைகளை தயாரிக்கும் செயல்முறைகளை காட்டினார். 'சொல்லாத சொல் மருத்துவம்' என்ற தலைப்பில் ஆடிட்டர் வெங்கட சுப்பிரமணியம் பேசினார். நாம் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பயிற்சியாளர், சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை