வடமாநில சிறுமி சாவு போலீசார் விசாரணை
மோகனுார்: மோகனுார் தாலுகா, மட்டப்பாறை பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணைக்கு, சட்டீஸ்கர் மாநிலம், டிட்டம்பாராவை சேர்ந்த பின்டோமத்காமி மகள் பைக்கோ மத்காமி, 18, என்ற சிறுமி, 4 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வேலை பிடிக்கவில்லை எனக்கூறி, அருகில் உள்ள மற்றொரு கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.அங்கும் உடல் நிலை சரியில்லாமல் போனதால், ஆம்புலன்ஸ் மூலம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.