உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய குடிநீர் தொட்டி இடிப்பு பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

புதிய குடிநீர் தொட்டி இடிப்பு பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

ப.வேலுார்: -ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, 4வது வார்டு, வடக்கு நல்லியாம்பாளையம் பகுதியில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். குடிநீர் தொட்டி கட்டி நீண்ட நாட்கள் ஆனதால், பழுதாகி நீர் கசிந்து வந்தது. இதனால், பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள், டவுன் பஞ்., நிர்வா-கத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, சில நாட்களுக்கு முன், பழைய குடிநீர் தொட்-டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியை முழுவதுமாக இடித்து அகற்றியுள்ளனர். நேற்று காலை, குடிநீர் தொட்டி இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கூடிய மக்கள், குடிநீர் தொட்டியை இடித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., கவுன்சிலர் ராமசாமி தலை-மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார், 'தங்களது புகாரை மனுவாக எழு-திக்கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறியாதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரப-ரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி