பொது மக்கள் கோரிக்கையால் வேகத்தடைக்கு வர்ணம் பூச்சு
வெண்ணந்துார்: ஆட்டையாம்பட்டியில் இருந்து, வெண்ணந்துார் வழியாக ராசி-புரம் செல்லும் சாலை அதிகம் போக்குவரத்து மிகுந்த சாலை-யாகும். இப்பகுதியில் அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாப், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அத்-தனுார் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட முக்கிய இடங்கள், இந்த சாலையில் உள்ளன. மேலும், நுாற்றுக்கணக்கான விசைத்தறி, கைத்தறி கூடங்கள் இந்த சாலையில் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலையில் மிக முக்கியமான இடமாக, வெள்ளப்பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் உள்ளது.ஆனால், இப்பகுதியில் உள்ள வேகத்தடையில், வெள்ளை வர்ணம் இல்லாததால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், தடு-மாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றன. இதனால், இந்த வேகத்த-டையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, நேற்று விபத்தை தடுக்கும் வகையில், வேகத்த-டைக்கு வெள்ளை வர்ணம் பூசும் பணி நடந்தது.