உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையத்தில் பலத்த மழை பொழிவு

குமாரபாளையத்தில் பலத்த மழை பொழிவு

குமாரபாளையம்: குமரபாளையத்தில், நேற்று மாலை ஏற்பட்ட பலத்த மழைப்பொழிவால் சுற்றுவட்டார மக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.குமாரபாளையத்தில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய மழைப் பொழிவு ஏற்பட்டது. ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்த மழைப்பொழிவால், சாலையின் தாழ்வான பள்ளங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இம்மழைப் பொழிவால் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார மக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ