உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விஷம் குடித்து தொழிலாளி சாவு

விஷம் குடித்து தொழிலாளி சாவு

குமாரபாளையம்: பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குமாபரபாளையம் ஹைஸ் ஸ்கூல் சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (30). விசைத்தறி தொழிலாளி அவர், கடந்த ஓராண்டாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்துள்ளார். அதில், மனமுடைந்த மணிகண்டன், நேற்று மாலை வீட்டில் இருந்த எலி மருந்தை தண்ணீரில் கலக்கி குடித்து மயங்கியுள்ளார். அவரை, அக்கம்பக்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை