முருக பக்தர்கள் நடைபயணம்
முருக பக்தர்கள் நடைபயணம்மல்லசமுத்திரம்,:ஆத்துார், கள்ளக்குறிச்சி, ராசிபுரம், தொப்பப்பட்டி, குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள், மாலை அணிந்து நேற்று, மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை வழியாக சாரை சாரையாக பழனி நோக்கி பாதயாத்திரை சென்றனர். வழிநெடுக பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தேநீர், உணவு உள்ளிட்டவற்றை மக்கள் அன்னதானமாக வழங்கினர். ஒருசில பக்தர்கள், மினி ஆட்டோக்களில் முருகன் சிலையை வைத்து, ஒலிப்பெருக்கிகளில் முருகன் பாடல்களை ஒலிக்கவிட்டு பக்தி பரவசத்துடன் நடந்து சென்றனர். ஐந்து நாட்கள் நடைபயணம் சென்று பழனியில் முருகனை தரிசனம் செய்துவிட்டு, மாலை நேரத்தில் மலைமீது கோவிலை சுற்றி வலம் வரும் தங்கத்தேரை தரிசனம் செய்துவிட்டு வீடுதிரும்ப உள்ளோம் என, பக்தர்கள் தெரிவித்தனர்.