உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆதியோகி சிலைக்கு தி.கோட்டில் வரவேற்பு

ஆதியோகி சிலைக்கு தி.கோட்டில் வரவேற்பு

திருச்செங்கோடு,: திருச்செங்கோட்டிற்கு வருகை தந்த ஆதியோகி சிலைக்கு, தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. ஆதியோகி சிலைக்கு மல்லிகை, அரளி, பன்னீர், வில்வ இலை, மரிக்கொழுந்து உள்ளிட்ட, ஐந்து வகையான மலர்கள் கொண்டு சிவ நாம அர்ச்சனை செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று கற்பூர ஆரத்தி காண்பித்தனர். மஹா சிவராத்திரி வருவதையொட்டி, தமிழகம் முழுவதும் ஆதியோகி சிலை வைக்கப்பட்ட ரதம் ஊர்வலம் செல்வது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை