மாணவியை தொடர்ந்தஇளைஞருக்கு கவனிப்பு
மாணவியை தொடர்ந்தஇளைஞருக்கு 'கவனிப்பு'குமாரபாளையம்:குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து மாணவி அங்கிருந்த மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை பிடித்த மக்கள், கம்பத்தில் கட்டி வைத்து நன்கு கவனித்தனர். குமாரபாளையம் போலீசார், இளைஞரை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.