பிளாஸ்டிக் பயன்பாடுதவிர்க்க விழிப்புணர்வு
பிளாஸ்டிக் பயன்பாடுதவிர்க்க விழிப்புணர்வுராசிபுரம்:ராசிபுரத்தில், பிளாஸ்டிக், கேரி பேக்குகள் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் கவிதாசங்கர் தலைமை வகித்தார். கமிஷனர் கணேசன் முன்னிலையில் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பொது இடங்களில் கிடக்கும் கேரி பேக்குகளை சேகரித்தனர். நிகழ்ச்சியில், முத்தாயம்மாள் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவியர், ஆசிரியர்கள், துாய்மை அலுவலர் செல்வராஜ், துாய்மை ஆய்வாளர் கோவிந்தராஜன், துாய்மை பணி மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.