உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்

லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்

லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்குமாரபாளையம்:குமாரபாளையத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.,க்கள் பொன்னுசாமி, ராம்குமார், குணசேகரன் உள்ளிட்ட போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, விநாயகர் கோவில் அருகே லாட்டரி விற்றது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், லாட்டரி விற்றுகொண்டிருந்த, அம்மன் நகரை சேர்ந்த சண்முகம், 59, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ