உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெடி பொருட்களை தவறாகபயன்படுத்த கூடாது

வெடி பொருட்களை தவறாகபயன்படுத்த கூடாது

'வெடி பொருட்களை தவறாகபயன்படுத்த கூடாது'நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து வெடி பொருட்கள் மற்றும் கல் குவாரி உரிமைதாரர்கள், வெடிமருந்து தயாரிக்க உரிமம் பெற்றவர்கள், வெடி பொருட்கள் மற்றும் பட்டாசுகள் இருப்பு வைத்து விற்பனை செய்யும் உரிமைதாரர்கள், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உரிமைதாரர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்து பேசுகையில், ''பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உரிமம் பெற்ற வெடிபொருட்கள் உரிமைதாரர்கள், கல் குவாரி உரிமைதாரர்கள், வெடிபொருட்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வெடி பொருட்களை கல் குவாரிகளுக்கு அனுப்பும்போது, உரிய பாதுகாப்புடன் அனுப்ப வேண்டும். அதற்கான பதிவேடுகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். வெடிபொருட்ளை உரிய விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும்,'' என்றார்.******************************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ