மேலும் செய்திகள்
கே.ஜி.புதுார் பகுதியில் புதிய மின் இணைப்பு எண்
21-Mar-2025
நாரைக்கிணறு பகுதியில்மின்கட்டண மாதத்தில் மாற்றம்நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சி அடுத்த நாரைக்கிணறு பகுதியில், மின் கட்டண மாதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மின்பகிர்மான கழக முள்ளுக்குறிச்சி பிரிவு உதவி பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:நாரைக்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள், கடைகள், ரைஸ்மில், பூந்தோட்டம் மற்றும் இதர இணைப்புகளுக்கு ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்., நவ., ஆகிய ஒற்றை படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு பணம் செலுத்தி வந்தனர். தற்போது, நிர்வாக காரணங்களால், இனி வரும் காலங்களில் பிப்., ஏப்., ஜூன், ஆக., அக்., டிச., என இரட்டை படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே, மின் பயனீட்டாளர்கள் ஏப்ரல் மாதம் கணக்கீடு செய்த, 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
21-Mar-2025