மேலும் செய்திகள்
விழுந்த கட்டட மேஸ்திரி பலி
27-Feb-2025
மலைப்பாதையில் லாரிகவிழ்ந்து ஒருவர் பலிசேந்தமங்கலம்:கொல்லிமலையில் இருந்து, சிமென்ட் அட்டைகளை ஏற்றி வந்த மினி லாரி, 46வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.சேந்தமங்கலம் அருகே, வீசாணம் வெங்கசரளமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 33, டிரைவர். இவர், நேற்று கொல்லிமலை தண்ணிமாத்திப்பட்டியில் இருந்து, மினி லாரியில் நாமக்கல்லிற்கு, 160 சிமென்ட் அட்டைகளை ஏற்றி கொண்டு மலையில் இருந்து இறங்கியுள்ளார். 46வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது, நிலை தடுமாறி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில், மினி லாரியில் அமர்ந்து வந்த காட்டுப்புத்துாரை சேர்ந்த ஜெயராமன், 60, என்பவர் உயிரிழந்தார். செம்மேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27-Feb-2025