உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரத்து குறைவால்அரளி விலை உயர்வு

வரத்து குறைவால்அரளி விலை உயர்வு

வரத்து குறைவால்அரளி விலை உயர்வுவெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பல்லவநாய்க்கன்பட்டி, குட்ட லாடம்பட்டி, தேங்கல்பாளையம், கல்லாங்குளம், ஆர்.புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் அரளி சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் விளையும் பூக்களை அதிகாலையில் பறித்து, சேலம், நாமக்கல் பகுதிகளில் செயல்படும் பூக்கள் சந்தைக்கு கொண்டுவந்து, ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் தொடக்கத்தில் அரளி வரத்து அதிகரிப்பால், ஒரு கிலோ, 30 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது பங்குனி உத்திரம், அமாவாசை, சுபமுகூர்த்த தினம் மற்றும் கோவில் திருவிழாக்கள் வரிசை கட்டுவதால், நேற்று ஒரு கிலோ அரளி, 200 ரூபாய் முதல்,- 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, அரளி செடிகளை பெரும்பாலான விவசாயிகள் கவாத்து செய்துள்ளதால், பூக்கள் வரத்து குறைந்தது. தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால், அரளி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ