மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
06-Apr-2025
விஜயகிரி வடபழனியாண்டவர்கோவிலில் கொடியேற்ற விழாப.வேலுார்:-ப.வேலுார் அருகே, பிலிக்கல்பாளையம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில், பங்குனி உத்திர தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று முன்தினம் இரவு மூலவர் மற்றும் கொடி கம்பத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சதீபம், மஹா தீபம் காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடந்தது.வரும், 10 முதல் தினந்தோறும் இரவு சுவாமி மயில், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 11 காலை, 6:15 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 12ல் சத்தாபரணம், கொடி இறக்குதலும், 13ல் மஞ்சள் நீராடலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜனனி, செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
06-Apr-2025