மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் செயல்படும், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். அதில், ஒப்பந்ததாரர் மூலம் வழங்கும் சம்பளத்தை, அரசு நேரடியாக வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்திட வேண்டும். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன.இதில் நிர்வாகிகள் பொன்னர்சங்கர், அருள், கண்ணன், தினேஷ்குமார், கோவிந்தன், பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.