உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டயத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பட்டயத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பட்டயத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் 24க்குள் விண்ணப்பிக்க அழைப்புநாமக்கல்:'தொடக்கக்கல்வி பட்டயத்தேர்விற்கு, தனித்தேர்வர்கள், வரும், 24 வரை இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:வரும், மே மாதம் நடக்க உள்ள தொடக்கக்கல்வி பட்டயத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், www.dge,tn,gov.inஎன்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து, ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை இணைத்து, நாமக்கல் மாவட்ட கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.தனித்தேர்வர்கள் உரிய தேர்வு கட்டணத்துடன், நேற்று தொடங்கி, வரும், 24 வரை, மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள், சிறப்பு (தட்கல்) அனுமதி திட்டத்தில், வரும், 25 முதல், 26 வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை