உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24.69 லட்சத்திற்கு எள் விற்பனை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24.69 லட்சத்திற்கு எள் விற்பனை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24.69 லட்சத்திற்கு எள் விற்பனைநாமக்கல்:நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் யூனியன், உஞ்சனையில் செயல்படும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் எள், தேங்காய் பருப்பு, நிலக்கடலை பருப்பு, கொள்ளு, பாசிப்பயறு, உளுந்து, ஆமணக்கு ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் நடந்த மறைமுக ஏலத்தில், விவசாயிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.ஏலத்தில், 152 விவசாயிகள், 16,461 கிலோ எள் கொண்டு வந்திருந்தனர். அவை, ஒரு கிலோ, குறைந்தபட்சம், 158.90 ரூபாய், அதிகபட்சம், 205.60 ரூபாய் என, மொத்தம், 24 லட்சத்து, 69,483 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், 21 விவசாயிகள், 732 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர். அவை, குறைந்தபட்சம், 124 ரூபாய், அதிகபட்சம், 141.20 ரூபாய் என, மொத்தம், 90,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு விவசாயி கொண்டுவந்த, 557 கிலோ ஆமணக்கு, 35,982 ரூபாய்க்கு விற்பனையானது. ஆறு விவசாயிகள் கொண்டுவந்த, 729 கிலோ கொள்ளு, குறைந்தபட்சம், 32 ரூபாய், அதிகபட்சம, 43 ரூபாய் என, மொத்தம், 24,953 ரூபாய்க்கு விற்பனையானது. 80 கிலோ துவரை, 5,200 ரூபாய்க்கு விற்பனையாது.'இனி வரும் காலங்களில், வாரந்தோறும், செவ்வாய்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலைக்காய், நிலகடலை பருப்பு, எள், உளுந்து, கொள்ளு, துவரை, ஆமணக்கு ஏலம் நடபெறும். 'ஏலத்தில், திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். விபரங்களுக்கு, 9442586421 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' நாமக்கல் விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ