மக்களுடன் முதல்வர் முகாம்ரூ.70.80 லட்சத்தில் நலத்திட்டம்
மக்களுடன் முதல்வர் முகாம்ரூ.70.80 லட்சத்தில் நலத்திட்டம்திருச்செங்கோடு:பரமத்தி வேலுார் சட்டசபை தொகுதி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொன்னையார் ஊராட்சி, திருச்செங்கோடு சட்டசபை தொகுதி, வட்டூர், ஓ.ராஜபாளையம் ஊராட்சிகள் மற்றும் குமாரபாளையம் சட்டசபை தொகுதி, பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் மற்றும் கலியனுார் ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர், மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 127 பயனாளிகளுக்கு, 70.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார். மேலும, 15 அரசு துறைகளை சேர்ந்த, 44 வகையான கோரிக்கைகளை பெற்று தீர்வு காணப்பட்டன.