அரசு மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
நாமக்கல்: நாமக்கல் - திருச்சி சாலையில், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரி செயல்படுகிறது. இங்கு, வேதியியல் துறை சார்பில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியர் லட்சுமி வரவேற்றார். துணைத்தலைவர் சக்திவேல் பேசினார். ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்ட கருத்தரங்கில், முதல் மூன்று பிரி-வுகளில் சிலி பல்கலை பேராசியர் பிரபு, சேலம் அரசு கலை கல்-லுாரி பேராசிரியர் பார்வதி, பாரதியார் பல்கலை பேராசிரியர் கண்ணன் ஆகியோர் வேதியியலில் வினையூக்கிகளின் பங்கு என்ற தலைப்பில் பேசினர்.அதேபோல், மெட்ராஸ் பல்கலை பேராசிரியர்கள் மேகராஜன், தியாகராஜன் ஆகியோர் வேதியியலில் உள்ள வாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சி குறித்து பேசினர். கருத்தரங்கில் நாமக்கல், சேலம், திருச்சி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கல்லுாரிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்-றனர்.