உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மஞ்சப்பை பயன்படுத்தவிழிப்புணர்வு நிகழ்ச்சி

மஞ்சப்பை பயன்படுத்தவிழிப்புணர்வு நிகழ்ச்சி

மஞ்சப்பை பயன்படுத்தவிழிப்புணர்வு நிகழ்ச்சிசேந்தமங்கலம்:சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் மதன் வரவேற்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, தமிழக அரசு தடை செய்துள்ள ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் கேரி பேக் பேன்ற நெகிழி பொருட்களுக்கு மாற்று பொருளாக ‍அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமை தாசில்தார் கோபி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை