மேலும் செய்திகள்
சுப முகூர்த்த நாட்களால் குண்டுமல்லி கிலோ ரூ.700
05-Jun-2025
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகள் அதிகளவில் அரளி பூச்செடிகளை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய் யும் பூக்களை, விவசாயிகள் சேலம், நாமக்கல் மற்றும் ஆத்துார் பகுதிகளுக்குகொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.கொல்லிமலை அடிவாரப்பகுதியில் விளையும் பூக்கள் பெரிதாகவும், வாசனை அதிகமாகவும் உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து, வியாபாரிகள் நேரடியாக விவசாய தோட்டங்களுக்கு வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ அரளி, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை உயர்ந்து நேற்று அரளி கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
05-Jun-2025