நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
குமாரபாளையம் குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. இதனால், திருச்செங்கோடு, ராசிபுரம், மேட்டூர் நகராட்சி கமிஷனர்கள், பொறுப்பு கமிஷனராக பணியாற்றி வந்தனர். பின், கமிஷனர் இல்லாததால், பொறியாளர் ராஜேந்திரன் அனைத்து பணிகளையும் கூடுதலாக கவனித்து வந்தார். அவரும், இரண்டு மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார்.இதன் காரணமாக, நகராட்சியின் வழக்கமான பணிகள், கலெக்டர் அலுவலக கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல பணிகளை கவனிக்க முடியாத நிலை நீடித்து வந்தது. இதனால் நகராட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, புதிய, நிரந்தர கமிஷனரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத் தில் பணியாற்றி வந்த ரமேஷ், நேற்று குமார பாளையம் நகராட்சி கமிஷனராக பொறுப்பற்றுக்கொண்டார். இவரை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் வாழ்த்தினர்.