உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாழைத்தார் விலை சரிவு

வாழைத்தார் விலை சரிவு

ப.வேலுார், ப.வேலுார் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டு, தற்போது விளைந்த வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர். இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது.இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தார்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரம், 400க்கு விற்ற பூவன் வாழைத்தார், தற்போது, 200 ரூபாய்; 400க்கு விற்ற ரஸ்தாளி, 250 ரூபாய்; 40க்கு விற்ற கற்பூரவள்ளி, 200 ரூபாய், ஏழு ரூபாய்க்கு விற்ற மொந்தன் காய், ஐந்து ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி