உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

மல்லசமுத்திரம், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மாலை, 5:30 மணி முதல் ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். மதியம், 12:00 மணிக்கு, மலை மீதுள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், ஜவ்வாது, திருநீறு, கரும்புச்சாறு உள்ளிட்ட மூலிகைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடந்தது.இரவு, 8:00 மணிக்கு, மலை அடிவாரத்தில் உள்ள அடிவார மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை