உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாநில கபடி போட்டி

மாநில கபடி போட்டி

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் காவிரி பிரதர்ஸ் கபடி குழு சார்பில் முதலாமாண்டாக, மாநில அளவில் ஆண்கள் கபடி போட்டி, கடந்த, 22, 23ல் நடந்தது. இந்த கபடி போட்டியில், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து, 59 கபடி அணிகள் கலந்து கொண்டன. முதல் பரிசு பெற்ற காவிரி பிரதர்ஸ் அணிக்கு, 15,001 ரூபாய், பரிசு தொகையை, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி வழங்கினர். இரண்டாம் பரிசு பெற்ற, ஏ.பி.கே., சேலம் அணிக்கு, 10,001 ரூபாய், பரிசு தொகையை, முன்னாள் சேர்மன் செந்தில் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற, தாரை தாராபுரம் அணிக்கு, 5,001 ரூபாய், பரிசு தொகையை, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., அ.தி.மு.க., செயலாளர் செல்லதுரை வழங்கினர். மேலும், வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ