உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாங்கிய கர்ப்பிணியிடம்2 பவுன் நகை பறிப்பு

துாங்கிய கர்ப்பிணியிடம்2 பவுன் நகை பறிப்பு

துாங்கிய கர்ப்பிணியிடம்2 பவுன் நகை பறிப்புசேந்தமங்கலம்:சேந்தமங்கலம் யூனியன், துத்திக்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் அபிஷேக் மனைவி சினேகா, 23; கர்ப்பிணியான இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல், பாட்டி குழந்தையம்மாள், 80, என்பவருடன் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை, 4:00 மணியளவில், குழந்தையம்மாள் கழிப்பிடத்திற்கு ‍செல்ல, வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டில் புகுந்து அயர்ந்து துாங்கிக்கொண்டிருந்த சினேகாவின் கழுத்தில் இருந்து, இரண்டு பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி