உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பைக் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலி

பைக் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலி

மோகனுார்: நாமக்கல், மோகனுார் சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் நவாப் ஜான், 70; ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். தற்போது, மோகனுாரில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணியளவில் அதே பள்ளியில் வேலை பார்க்கும் மோகனுாரை சேர்ந்த ராஜசேகர், 49, டூவீலரில் உட்கார்ந்துகொண்டு சென்றார். மோகனுாரில் இருந்து வளையப்பட்டி சாலையில் உள்ள செந்தில் ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பள்ளி பஸ், பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த நவாப்ஜானை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ