மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கான, தேர்தல் நடந்தது. இதில், 24 பெற்றோர் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாக குழு தலைவராக சித்ரா, செயலாளராக தலைமை ஆசி-ரியர் சத்தியவதியும், உறுப்பினராக செந்தில், ராமலிங்கம், தீபா உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.