எம்.எல்.ஏ., ராமலிங்கம் மகள் திருமண விழா அமைச்சர்கள், எம்.பி.,க்கள் நேரில் வாழ்த்து
எம்.எல்.ஏ., ராமலிங்கம் மகள் திருமண விழாஅமைச்சர்கள், எம்.பி.,க்கள் நேரில் வாழ்த்துநாமக்கல், செப். 8--நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் மகள் திருமண விழாவில், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். -நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம்- - இந்திரா தம்பதியரின் மகள் தீப்தி, நாமக்கல் அத்தியப்பம்பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி- - கமலம் தம்பதியரின் மகன் ரேவந்த் ஆகியோர் திருமணம், நாமக்கல் அருகே உள்ள தோப்பூர் கொங்கு திருமண மாளிகையில் நடந்தது. அதை தொ டர்ந்து மணமக்கள் ரேவந்த் - தீப்தியின் திருமண வரவேற்பு விழா நடந்தது. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், அரசு கொறடா கோவிசெழியன், கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் எம்.பி., ராஜேஸ்குமார், எம்.பி.,க்கள் சேலம் செல்வகணபதி, பெரம்பலுார் அருண்நேரு, நாமக்கல் மாதேஸ்வரன், ஈரோடு பிரகாஷ், சட்டசபை பேரவை செயலாளர் சீனிவாசன், சட்டசபை உறுப்பினர்கள் ஈஸ்வரன், பொன்னுசாமி, காடுவெட்டி தியாகராஜன், ராஜா, மோகன், ஸ்டாலின்குமார், லட்சுமணன், கிரி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நாமக்கல் கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், மாநகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாநகராட்சி கமிஷனர்கள் மகேஸ்வரி, சுதா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.