மேலும் செய்திகள்
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு
28-Aug-2025
ராசிபுரம் :ராசிபுரம் அடுத்த பட்டணத்தில், சிவசக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று பொங்கல் விழா நடந்தது. பெண்கள் வீடுகளில் பொங்கல் வைத்து, விநாயகருக்கு படைத்தனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தன. உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பாரம்பரிய கலைகளை போற்றும் விதமாக. பொய்க்கால் குதிரை ஆட்டம் நடந்தது. பெண்கள் தப்பாட்டம் ஆடி அசத்தினர். ராசிபுரம், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, நாமரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
28-Aug-2025