உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவியருக்கு விழிப்புணர்வு

மாணவியருக்கு விழிப்புணர்வு

நாமக்கல் :சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழக மாநில மகளிர் ஆணையம் சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் போர்ஷியாரூபி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ