1வது கொண்டை ஊசி வளைவுஆபத்தான பகுதியாக அறிவிப்பு
1வது கொண்டை ஊசி வளைவுஆபத்தான பகுதியாக அறிவிப்புசேந்தமங்கலம்:கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் நடந்த விபத்தையடுத்து, அப்பகுதி ஆபத்தான வளைவாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலைக்கு செல்ல காரவள்ளியில் இருந்து சோளக்காடு வரை, 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில், 15க்கும் மேற்பட்ட வளைவுகள் மிகவும் ஆபத்தான வளைவுகளாக போலீசாரால் அறிவிக்கப்பட்டள்ளது.இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கொல்லிமலையில் இருந்து வியாபாரி ஒருவர், மினி சரக்கு ஆட்டோவில் விசேஷத்திற்காக கூந்தப்பனையை ஏற்றிக்கொண்டு காரவள்ளிக்கு வந்தார்.அந்த சரக்கு ஆட்டோவில், விவசாயி ஒருவர் அமர்ந்து வந்தார். அப்போது, கடைசி கொண்டை ஊசி வளைவான, ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் மினி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் பயணம் செய்த விவசாயி உயிரிழந்தார். இதையடுத்து, ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட போலீசார், அந்த இடம் மிகவும் ஆபத்தான வளைவாக அறிவித்துள்ளனர். மேலும், மலைக்கு செல்லும் வாகனங்கள் மிகவும் கவனத்துடன் பயணிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.