ரூ.1,000 வழிப்பறி2 வாலிபர்கள் கைது
ரூ.1,000 வழிப்பறி2 வாலிபர்கள் கைதுஎருமப்பட்டி, :எருமப்பட்டி யூனியன், வருதராஜபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார், 23; இவர், நேற்று எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரை வழிமறித்த, இரண்டு வாலிபர்கள், அவரை மிரட்டி, 1,000 ரூபாயை வழிப்பறி செய்தனர். இதுகுறித்து, அருண்குமார் எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்படி, விசாரணை நடத்திய போலீசார், வழிப்பறி செய்த வரகூரை சேர்ந்த ரகுநாத், 21, சந்தோஷ், 23, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.