மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
10-Mar-2025
ப.வேலுார் மின்வாரியத்தில்5ல் நுகர்வோர் குறைதீர் முகாம்ப.வேலுார்:-ப.வேலுார் மின் பகிர்மான கழகம் சார்பில், செயற்பொறியாளர் வரத ராஜன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அறிவுறுத்தல்படி, மின் கட்டணம் தொடர்பான புகார்கள், பழுதடைந்த மின் அளவைகள் குறித்த புகார்கள், பழுதடைந்த மின் கம்பங்கள் குறித்த புகார்கள், குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை தீர்க்க, வரும், 5ல் ப.வேலுார் கோட்ட செயற்பொறியாளர் மின்வாரியம் அலுவலகத்தில், காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. மின் நுகர்வோர்கள் முகாமில் கலந்துகொண்டு, குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-Mar-2025