உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 9 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான, 'நல்லாசிரியர்' விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், நாமக்கல் மாவட்டத்தில், 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு, சென்னையில் இன்று (செப்., 5) நடக்கும் விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர், விருது வழங்குகின்றனர். அவர்களின் விபரம் வருமாறு:நடப்பாண்டில், 'நல்லாசிரியர்' விருது கிடைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். அதற்கு காரணம் எனது உழைப்பு தான். நான் பணியாற்றிய காலகட்டத்தில், மாணவர்களுக்கு செய்த தன்-னலமற்ற தொண்டும், மாணவர்கள் முன்னேறினால் தான், இந்த நாடு முன்னேறும் என்ற எண்ணத்தில், நான் ஆற்றிய பணிக்காக கிடைத்த ஒரு அரும்பெரும் விருது என நினைக்கின்றேன்.- -- பெ.ராஜமாணிக்கம், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஜேடர்பாளையம்.நான், 20 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்த கல்வியாண்டில், நல்லாசிரியர் விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்த விருது மூலம், வருகின்ற பணிக்காலத்தில் மேலும் மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தல் பணியில் ஊக்கப்படுத்தவும், மாணவர்களை முன்னேற்றவும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.- ரா.சக்திவேல், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.புதுப்பாளையம்.ஆசிரியர் பணியில் விருது கிடைத்ததில் மனமகிழ்ச்சி அடைவதுடன், தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய பணியை மிகவும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். ஆசிரியர் பணிக்கு எங்களை அர்ப்பணித்துக் கொள்வதில் பெருமை அடைகிறோம். எனது உழைப்புக்கு கிடைத்த விருது.- -பொ.பாரதி, தலைமையாசிரியர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, பள்ளிப்பாளையம்.நான், எனது குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை சிறப்பாக கற்பித்து வருகிறேன். அதனால், என் மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக உயர்ந்துள்ளது. புதிய கல்வி பாடத்திட்டத்தின் கற்பித்தல் முறையை ஒவ்வொரு பருவத்திலும், மாவட்ட கருத்தாளர்கள், ஆசிரியர்களுக்கு கற்றுத்தருகிறேன். ஜீரோ காஸ்ட் டி.எல்.எம்., திட்டம் பேருதவியாக இருக்கிறது.- ஞா.சொர்ணதீபம், இடைநிலை ஆசிரியர், பஞ்., தொடக்கப்பள்ளி, பள்ளிப்பாளையம்.நான் சீக்குப்பாறைப்பட்டி பஞ்., தொடக்கப்பள்ளியில், 22 ஆண்-டுகளாக தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறேன். மாநில நல்லாசிரியர் விருது கிடைத்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடை-கிறேன். இந்த விருதை, எனது பிள்ளைகளுக்கும், எனக்கு உறுது-ணையாக இருந்த அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இந்த விருது எனக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. நான் பட்ட பல கஷ்டங்களுக்கு சிறந்த பரிசாக இந்த விருதை கருதுகிறேன்.- ஐ.அன்னம்மாள், தலைமையாசிரியர், பஞ்., தொடக்கப்பள்ளி, கொல்லிமலை.தமிழின் இலக்கியத்தை, தமிழனுடைய தொன்மையை, அறநெறி கருத்துக்களை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கிறேன். நிறைய போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வதால், அரசு எனது பெயரை இந்த விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தருணத்தை எண்ணி மகிழ்கிறேன்.- செ.செந்தில்குமார், முதுகலை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி.நல்லாசிரியர் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இன்னும் சிறப்பாக பணியாற்றக்கூடிய உத்வேகத்தை எனக்கு அளித்துள்ளது. நான், 29 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். வணிகவியல் துறையில் அதிக அளவில் புத்தகம் எழுதி உள்ளேன். பிளஸ் 1, பிளஸ் 2 புத்தக நுாலாசிரியராகவும், தமிழக அரசு சார்பில், மூன்று புத்தகம் எழுதி இருக்கிறேன்.- ஆர்.ரமேஷ், துணை முதல்வர், டிரினிட்டி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.நான் பணியில் சேர்ந்தது முதல், 28 ஆண்டுகளாக, 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்துள்ளேன். ஆறு நுால்கள் எழுதி உள்ளேன். தமிழக அரசின் கனவு திட்டமான பொறியியல் கல்விக்கான, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், எனது வகுப்பில் படித்த மாணவர்கள் கடந்தாண்டில், அண்ணா பல்கலை முதல்கொண்டு, 10 மாணவர்கள், இந்தாண்டு, 4 மாணவர்கள் சேர்க்கை பெற வழிவகை செய்துள்ளேன். அதற்காக எனக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.- எஸ்.கார்த்திக், தொழிற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம்.இடைநிலை ஆசிரியராக பணியை தொடங்கி, தமிழ் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று, 35 ஆண்டுகள் பணி செய்து வருகிறேன். நான் சிறப்பாக பணியாற்றியதற்காக நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.- வே.லட்சுமி, தலைமையாசிரியர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, ராசிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை