உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் கலை திருவிழா

அரசு பள்ளியில் கலை திருவிழா

பள்ளிப்பாளையம், செப். 6-பள்ளிப்பாளையம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் கலை திருவிழா நடந்தது.பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில், துணை தலைவர் பாலமுருகன் முன்னிலையில் விழா நடந்தது. 150க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெறும் மாணவிகள், வட்டார அளிவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். தலைமையாசிரியர் அமுதா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ