உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அனுமதியின்றி செயல்பட்ட பார் கலெக்டர் உத்தரவுப்படி அடைப்பு

அனுமதியின்றி செயல்பட்ட பார் கலெக்டர் உத்தரவுப்படி அடைப்பு

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த பாரை, கலெக்டர் உத்தரவுப்படி, வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் அடைத்தனர்.இதுகுறித்து, குப்பாண்டபாளையம் பஞ்., மக்கள், கலெக்டருக்கு அனுப்பிய புகார் மனு: கோட்டைமேடு கிராமம், சாணார்பாளையம் செல்லும் வழியில் அனுமதியின்றி, மது பார் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும், 'குடி' மகன்கள், மது பாட்டில்களை உடைப்பது, சாலையிலேயே அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட, முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த எங்களுக்கு, சில நாட்களாக, இந்த பார் மிகுந்த இடையூறாகவும், மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. நாங்கள் இப்பகுதியில் வசிக்க வேண்டும் என்றால், அனுமதியின்றி செயல்பட்டு வரும் பாரை அகற்ற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, வருவாய்த்துறை, போலீசாருக்கு, கலெக்டர் உமா உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நேரில் சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள், அனுமதி இன்றி செயல்பட்ட பாரை அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ