உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ் வசதி கேட்டு சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

பஸ் வசதி கேட்டு சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிள்ளைகளத்துார் உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கேட்டு, நாமக்கல்லில் சி.ஐ.டி.யு., மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய தொழிற்சங்க மையம், சி.ஐ.டி.யு., சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார்.அதில், பிள்ளைகளத்துார், வில்லிபாளையம், சுங்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், வெளியூர் வேலை, மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிக்கு சென்று வருகின்றனர். அவர்களின் நலன் கருதி, அந்தந்த கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்க போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை