உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உபயதாரர் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது

உபயதாரர் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது

நாமக்கல்: 'உபயதாரர்கள் எந்த கட்சி என பார்க்கக்கூடாது. பெயர் பலகையில் இடம் பெறுவது எதிர்ப்பதை கண்டிக்கத்தக்கது' என, ஹிந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா தலைவர் ஸ்ரீதரன் கூறினார். இதுகுறித்து, அவர் நாமக்கல்லில் கூறியதாவது:நாமக்கல் நகரின் மையப்பகுதியில், ஹிந்து சமய அறநிலைத்து-றைக்கு சொந்தமான பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்-துள்ளது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு பின், நாளை இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, கோவிலின் பெயர் பலகை கோபுரம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில், தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார், மாநகராட்சி துணைத்த-லைவர் பூபதி ஆகிய இருவரின் பெயர் இடம் பெற்றிருப்பதை, சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்-கிறோம். உபயதாரர்களை எந்த கட்சி என பார்க்க கூடாது. கும்பா-பிஷேகம் அமைதியாக நடக்க வேண்டும். பிரச்னை செய்பவர்-களை அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ